/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்
/
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்
ADDED : டிச 12, 2024 05:48 AM

உடுமலை; பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைத்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பஸ்ஸ்டாண்ட், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. பஸ்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும், பஸ் ஸ்டாண்டில், 5 வழித்தடங்கள் அமைந்துள்ளன.
இதனால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல் அதிகரித்து, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களும் பாதிக்கப்படுகின்றன.
உதாரணமாக பஸ் ஸ்டாண்ட்டின் மேற்குப்பகுதியில், ஆனைமலை, திருப்பூர், செஞ்சேரிமலை வழித்தட பஸ்கள் வெளியேறும் பகுதியில் பல்வேறு குளறுபடிகள் தொடர் கதையாக உள்ளது. பஸ்கள் வெளியே வரும் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பஸ்கள் திரும்பும் இடத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் அமைந்துள்ளது. ஒருவழிப்பாதையாக இருந்தாலும் விதிகளை மீறி, எதிர்திசையில் வாகனங்கள் செல்கின்றன.
இதனால், பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையில் இணைய திணற வேண்டியுள்ளது. அருகிலுள்ள நடைபாதையிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், பயணியரும் சிரமப்படுகின்றனர்.
நீண்ட காலமாக நிலவும் இப்பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடையூறாக உள்ள மின்கம்பங்களை இடம் மாற்றி, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்தால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

