/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டண உயர்வு ரத்து; வியாபாரிகள் வேண்டுகோள்
/
மின் கட்டண உயர்வு ரத்து; வியாபாரிகள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 09, 2025 11:00 PM
திருப்பூர்: திருப்பூர் தொழில் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், மின்கட்டணம், சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டுமென, வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் துரைசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
'டாலர் சிட்டி' என்ற பெயருடன் விளங்கும் திருப்பூரில், பனியன் தொழில் பிரதானமாகவும், மற்ற தொழில்களும் உள்ளன. அதிக வேலை வாய்ப்பு கிடைப்பதால், தொழிலாளர் நிறைந்த மாநகரமாக இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு, மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. 'பீக்ஹவர்' கட்டணம், நிலை கட்டணம் உயர்த்தியதால், மின் கட்டணங்களை செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. பனியன் நிறுவனங்கள் நஷ்டமடைந்து, 50 சதவீதம் இயக்கத்தை மூடிவிட்டனர். மாநகராட்சியின் சொத்துவரியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தொழில் பாதித்து, தொழிலாளரின் வருவாய் குறைந்துள்ள நிலையில், மின்சார கட்டணமும், சொத்து வரி உயர்வும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தொழிலாளர் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், மின்சார கட்டணம் மற்றும் மாநகராட்சி சொத்து வரி உயர்வை, மறுபரிசீலனை செய்து குறைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.