/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டண உயர்வு அதிகரிப்பால் தொழில் துறைக்கு 'ஷாக்'! குறு, சிறு தொழில் முடங்கும் அபாயம்

ADDED : ஜூலை 03, 2025 12:12 AM

திருப்பூர்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கும் அபாயம் இருப்பதால், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென, தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை மின்கட்டண உயர்வு செய்துள்ளது. கடந்த முறை, மின்சார கட்டணம், நிலை கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில்துறையினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
எட்டு கட்டமாக போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தாண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில், 60 சதவீதம் வரை உயர்த்திய நிலையில், தற்பாது, 3.16 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பலகட்ட போராட்டம் நடத்திய பின்னரும், மின்கட்டண உயர்வுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணம் உயர்வதால், குறு, சிறு தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.