ADDED : ஜூலை 30, 2025 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்ட தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் மார்க்ஸ், திட்ட பொருளாளர் ஐஸ்டின் திரவியம், முன்னாள் செயலாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.