தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்கம்

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்கம்

 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்கம்


ADDED : பிப் 13, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு நடமாடும் செயல் விளக்க வாகனம் என, 8 சட்டமன்ற தொகுதிகளில் நடமாடும் செயல் விளக்க வாகனம் வாயிலாக, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல் விளக்கம் வழங்கப்பட உள்ளது.

ஓட்டளிக்கும் முறை, வாக்காளர் செலுத்திய ஓட்டுக்களை உறுதிப்படுத்தும் கருவியின் செயல்பாடு ஆகியவை குறித்து விளக்கப்படும். அதோடு, கலெக்டர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், தாராபுரம், திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆர்.டி.ஓ. அலுவலகங்களில், செய்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல் விளக்கத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டார்.

பின், புதிய பஸ் ஸ்டாண்டில், செயல் விளக்க நடமாடும் வாகனத்தை பார்வையிட்டார்.அவருடன், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், வேளாண் இணை இயக்குனர் ஆதிசாமி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கனகராஜ் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us