தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'இ.எஸ்.ஐ. திட்டத்தில் தகுதியான தொழிலாளர் பயன் பெற வேண்டும்'

 'இ.எஸ்.ஐ. திட்டத்தில் தகுதியான தொழிலாளர் பயன் பெற வேண்டும்'

 'இ.எஸ்.ஐ. திட்டத்தில் தகுதியான தொழிலாளர் பயன் பெற வேண்டும்'


ADDED : ஏப் 09, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பாரதீய மஸ்துார் சங்கத்தின் மனிதவள மேம்பாட்டு துறை பொறுப்பாளர் துரைராஜ், இ.எஸ்.ஐ., திட்டத்தில், செயற்குழு உறுப்பினராக உள்ளார். நேற்று திருப்பூர் வந்திருந்த துரைராஜ், பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து, இ.எஸ்.ஐ., திட்டம் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பயனாளிகள் போதிய அளவு பயன்பெறவில்லை. திருப்பூர் பகுதியிலுள்ள, 5,500 பனியன் நிறுவனங்களில், எட்டு லட்சம் தொழிலாளர் இருக்கின்றனர். ஆனால், மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இ.எஸ்.ஐ., பயன் பெற்று வருகின்றனர். தகுதியான தொழிலாளர் அனைவரும், இ.எஸ்.ஐ., திட்ட பாதுகாப்பை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கே.என்.பி.,புரம் கிளை மேலாளர் இந்திரலேகா, பனியன் தொழிலாளர்களுக்கான, இ.எஸ்.ஐ., திட்டம் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் மாதவன், தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாநில செயலாளர் சந்தான கிருஷ்ணன், மோட்டார் சங்க செயலாளர் பாலமுருகன், கட்டுமான சங்க பொது செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us