sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சங்கடம் தரும் சாலைகள்... குப்பை சங்கமிக்கும் வீதிகள்!

/

சங்கடம் தரும் சாலைகள்... குப்பை சங்கமிக்கும் வீதிகள்!

சங்கடம் தரும் சாலைகள்... குப்பை சங்கமிக்கும் வீதிகள்!

சங்கடம் தரும் சாலைகள்... குப்பை சங்கமிக்கும் வீதிகள்!


ADDED : டிச 18, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 18, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோடு படுமோசம்

திருப்பூர், லட்சுமி நகர், மில்லர் சந்திப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.

- விஸ்வநாத், லட்சுமிநகர். (படம் உண்டு)

திருமுருகன்பூண்டி, பெருமாள் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலை சேதமாகி குழியாகியுள்ளது. மழைநீர் தேங்கி நிற்கிறது. புதிய ரோடு அமைக்க வேண்டும்.

- சுப்ரமணி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

திருப்பூர், 50 வது வார்டு, கரட்டாங்காட்டில் கேபிள் லைன் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)

திருப்பூர், கருவம்பாளையம், பழக்குடோன் ஸ்டாப்பில் ஒருபுற சாலையே இல்லை. பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்டது அப்படியே விடப்பட்டுள்ளது; ரோடு போட வேண்டும்.

- குமரேசன், கருவம்பாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. பாதசாரிகள் நிற்க இடமில்லை.

- செல்வராஜ், புஷ்பாதியேட்டர் ஸ்டாப். (படம் உண்டு)

திருப்பூர், அங்கேரிபாளையம், மாதேஸ்வரன் கோவில் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகி வருகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)

திருப்பூர், பி.கே.ஆர்., லே-அவுட் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பைப் உடைந்துள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகி, சாக்கடை கால்வாயில் கலக்கிறது. கேட்வால்வு சரி செய்ய வேண்டும்.

- செந்தில், பி.கே.ஆர்., லே-அவுட். (படம் உண்டு)

எப்படி செல்வது?

பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, முட்டியங்கிணறு ஏ.டி., காலனி, மயானம் செல்லும் வழியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீரை வெளியேற்ற வழி ஏற்படுத்த வேண்டும்.

- குமார், அப்பியாபாளையம். (படம் உண்டு)

தேங்கும் கழிவுநீரால் அவதி

திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிவுநீர் வெளியேறிச் செல்ல நிரந்த தீர்வு காண வேண்டும்.

- கார்த்திகேயன், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

நாய்த்தொல்லை

திருப்பூர், ஏ.வி.பி., ஜே.எஸ்., கார்டனில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- நவீன், ஏ.வி.பி.,ஜே.எஸ்., கார்டன். (படம் உண்டு)

போக்குவரத்து போலீசார் கவனத்துக்கு

திருப்பூர், சாமுண்டிபுரம் - சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றியபடி வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பதில்லை.

- கவுரிசங்கர், சாமுண்டிபுரம். (படம் உண்டு)

மாநகராட்சி கவனத்துக்கு

திருப்பூர், 15 வேலம்பாளையம் ரிங்ரோட்டில் மழைநீர் வழிந்தோட விரிவான வசதியில்லை. மழை பெய்யும் போதெல்லாம் வாகனங்கள் செல்ல வழியின்றி மழைநீர் தேங்கி விடுகிறது.

- தியாகராஜன், வேலம்பாளையம். (படம் உண்டு)

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், அவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ., சர்ச் பின்புறம், இந்திராநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சுப்பு, கே.பி.என்., காலனி. (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ப் பின்புறம், உழவர் சந்தை எதிர்புற டாஸ்மாக் கடை சந்தில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- முருகேசன், புதிய பஸ் ஸ்டாண்ட். (படம் உண்டு)

கழிவுநீரால் துர்நாற்றம்

திருப்பூர், அங்கேரிபாளையம், நீதியம்மாள்நகர், 2வது வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- சிவராஜ், நீதிஅம்மாள்நகர். (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

திருப்பூர், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி, ஏ.சி.எஸ்., மாடர்ன்சிட்டி ஸ்டாப் அருகே குப்பை கொட்டப்படுகிறது. தேங்கும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ரங்கசாமி, எஸ்.பெரியபாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us