/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாய் முழுவதும் கழிவுகள்; தீர்வு காண வலியுறுத்தல்
/
கால்வாய் முழுவதும் கழிவுகள்; தீர்வு காண வலியுறுத்தல்
கால்வாய் முழுவதும் கழிவுகள்; தீர்வு காண வலியுறுத்தல்
கால்வாய் முழுவதும் கழிவுகள்; தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : செப் 19, 2024 09:55 PM

உடுமலை : பாசன கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது தொடர்கதையாகியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம், இரண்டாம் சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலை கால்வாயில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பள்ளபாளையம், போடிபட்டி, உடுமலை நகரம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியையொட்டி இந்த கால்வாய் அமைந்துள்ளது.
எனவே கால்வாயில், அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து நேரடியாக பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பையை வீசுகின்றனர்.
அவை, விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடைகளில் சென்று அடைத்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளன.
இது குறித்து ஆயிரக்கணக்கான மனுக்களை விவசாயிகள் சமர்ப்பித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கால்வாய் கரையில் குப்பை தொட்டிகளை வைத்தாவது தற்காலிக தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.