ADDED : அக் 13, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த வாய்ப்பாடியை சேர்ந்தவர், கண்ணன், 35. தண்டவாள பராமரிப்பு ஊழியர். தினசரி திருப்பூர் வரும் இவர் பணி முடிந்து ஊத்துக்குளி சென்று அங்கிருந்து வாய்ப்பாடி செல்வார்.
கடந்த, 11ம் தேதி ஆயுதபூஜை கொண்டாட திருப்பூர் வந்த இவர், நண்பர்களை சந்திக்க, ஊத்துக்குளி சென்றுள்ளார். அங்கு ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக வேமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பரிதாபமாக இறந்தார். ரயில்வே போலீசார், கண்ணன் இறந்தது எப்படி என்பது குறித்து, வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.