/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷனில் பாக்கெட் முறை ஊழியர்கள் வலியுறுத்தல்
/
ரேஷனில் பாக்கெட் முறை ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2025 05:12 AM
திருப்பூர்,: தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்து கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று முதல் கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், இச்சங்கம் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராமு தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு விவரம்:
பி.ஓ.எஸ்., கருவியுடன் எலக்ட்ரானிக் தராசு இணைக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே சர்வர் பிரச்னை, நெட்வொர்க் பிரச்னை காரணமாக விரல் ரேகை பதிவு தாமதமாகிறது. தற்போது, ஒரு கார்டுக்கு பலமுறை ரேகை பதிவு செய்வதால் கால தாமதம், தேவையற்ற சர்ச்சை ஏற்படும். உரிய திட்டமிடல் இன்றி செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் கண்டறிந்து களைய வேண்டும்.கடைகளுக்கு வரும் பொருட்கள் எடை முறையாக இருக்க வேண்டும்.
கடைக்கு வரும் பொருட்கள் எடை சரி பார்த்த பின்பே பி.ஓ.எஸ்., கருவியில் பதிவேற்ற வேண்டும். எடை பிரச்னையை தவிர்க்க பாக்கெட்டில் பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.