ADDED : பிப் 03, 2024 12:26 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்;ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வலியுறுத்தி, அரசு மருத்துவமனை அடிப்படை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள், காவலாளிகள் ஆகிய அடிப்படை பணியாளர்கள் அரசு அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சி சந்திப்பில் நேற்று மாலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சமூக நீதி கட்சி, அரசு மருத்துவமனை அடிப்படை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர் செல்வம், தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
