ADDED : டிச 03, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி, மதியம், 2:00 மணிக்கு நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து வேலை தேடுபவர்கள் முகாமில் பங்கேற்கலாம். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவம் கொண்டுவரவேண்டும்.
முகாமில் பங்கேற்கும் வேலை தேடுவோரும், வேலை அளிக்கும் நிறுவனங்களும், http://www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

