நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர்-
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார்.
இதில், பல்வேறு வகையான 23 நிறுவனத்தினர் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும், 49 ஆண்கள்; 70 பெண்கள் என, மொத்தம் 119 வேலை தேடுவோர் பங்கேற்றனர்.
இவர்களில், மாற்றுத்திறனாளிகள் 5 பேர் உள்பட 16 ஆண்கள்; 24 பெண்கள் என, மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.