/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூழ்ந்த முட்புதர்; மாயமான சுகாதாரம்
/
சூழ்ந்த முட்புதர்; மாயமான சுகாதாரம்
ADDED : அக் 13, 2024 11:42 PM

எரியாத விளக்கு
தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம் சந்திப்பில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- மணிகண்டன், கரட்டாங்காடு. (படம் உண்டு)
செங்குந்தபுரத்தில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.
- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)
சுகாதாரக்கேடு
கே.வி.ஆர்., நகர் சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். தொட்டி அருகே தேங்கியிருக்கும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- ஜெயபிரகாஷ், கே.வி.ஆர்., நகர். (படம் உண்டு)
தண்ணீர் வீண்
பெரிய கடை வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன் குழாய் சரிசெய்ய வேண்டும்.
- விக்னேஷ், காங்கயம் ரோடு. (படம் உண்டு)
கழிவுநீர் தேக்கம்
போயம்பாளையம், பழனிசாமி நகரில் கால்வாயில் முட்புதர் வளர்ந்துள்ளது. கழிவுநீர் வெளியேற வசதியில்லை. சுத்தம் செய்ய வேண்டும்.
- கோகுல்ராஜ், பழனிசாமி நகர். (படம் உண்டு)
முட்புதர் அகலுமா?
ராயபுரம், விநாயகபுரம் சந்திப்பு சாலையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை சுற்றி முட்புதர் வளர்ந்துள்ளது. மாநகராட்சி சுத்தம் செய்ய வேண்டும்.
- சங்கர்சதீஷ், ராயபுரம். (படம் உண்டு)
சாலை சேதம்
யூனியன் மில் ரோடு - கே.பி.என்., காலனி இரண்டாவது வீதி சந்திப்பில், புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை குழியாகும் முன் சீரமைக்க வேண்டும்.
- அருள்பிரகாசம், கே.பி.என்., காலனி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
குழி மூடல்
குமரன் ரோட்டில் சாலை குழியாக இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. நெடுஞ்சாலைத்த்துறை மூலம் சாலை சரிசெய்யப்பட்டது.
- சிவசண்முகம், நல்லுார். (படம் உண்டு)