/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொலையாளிகளுக்கு 'என்கவுன்டர்' : திருப்பூரில் அர்ஜுன் சம்பத் ஆவேசம்
/
கொலையாளிகளுக்கு 'என்கவுன்டர்' : திருப்பூரில் அர்ஜுன் சம்பத் ஆவேசம்
கொலையாளிகளுக்கு 'என்கவுன்டர்' : திருப்பூரில் அர்ஜுன் சம்பத் ஆவேசம்
கொலையாளிகளுக்கு 'என்கவுன்டர்' : திருப்பூரில் அர்ஜுன் சம்பத் ஆவேசம்
ADDED : டிச 04, 2024 12:06 AM

பொங்கலுர்: ''மிகவும் கொடூரமான முறையில், 3 பேரை கொலை செய்த கொலையாளிகளை 'என்கவுன்டரில்' சுட்டுத்தள்ள வேண்டும்,'' என அர்ஜுன் சம்பத் ஆவேசமாக கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில், விவசாய தம்பதிகள் மற்றும் அவர்களது மகன் என மூவர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கூறியதாவது:
மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டது. தோட்டத்து சாளையில் குடியிருப்பவர்களை குறி வைத்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளையடிப்பது, கொலை செய்வது நடக்கிறது. இது மூன்றாவது சம்பவம். கள்ளக்கிணற்றில், நான்கு பேர் கொலையான விஷயத்தில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
சென்னிமலை அருகே இதேபோல் நான்கு பேரை வெட்டி கொலை செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இது போன்ற குற்றம் நடந்திருக்காது.
ஆங்காங்கே காவல்துறை சோதனை சாவடிகளை அமைத்திருக்க வேண்டும். ஏற்கனவே, அமைத்துள்ள சாவடிகளையே பூட்டி வைத்துள்ளனர். புறநகர் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வெளியூரிலிருந்து வேலைக்கு வருகிறவர்களை பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
போலீஸ் சரிவர பாதுகாப்பு கொடுக்காததால், பொதுமக்கள் தங்களுடைய எண்ணங்களை தெரிவிக்க, கோரிக்கைகளை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதற்கு அனுமதி இல்லை என்று தடுக்கின்றனர்.
கள்ளச்சாராயத்தில் இறந்தால், 10 லட்சம் ரூபாய் தருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும். கொலையாளிகளை கண்டறிந்து என்கவுன்டர் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.