/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஊராட்சியில் துவக்கம்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஊராட்சியில் துவக்கம்
ADDED : பிப் 12, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை பெரியகோட்டை ஊராட்சி, காமராஜ் நகரில், பிரதான ரோட்டை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது.
இதனால், உடுமலை நகரம் மற்றும் பெரியகோட்டையை இணைக்கும் பிரதான வழித்தடம் குறுகலாகி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.
அதன் அடிப்படையில், நேற்று ஆக்கிரமிப்பாளர்களே, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். ஒரு சில நாட்களில், முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.