/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் நாளை இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடக்கிறது
/
திருப்பூரில் நாளை இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடக்கிறது
திருப்பூரில் நாளை இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடக்கிறது
திருப்பூரில் நாளை இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடக்கிறது
ADDED : ஜூன் 27, 2025 11:57 PM

திருப்பூர்; பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர, காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவ, 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (29ம் தேதி) திருப்பூரில் நடக்கிறது.
தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணைய தளமான டி.என்.இ.ஏ., வாயிலாக, இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்துகிறது.
அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்களும், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். இன்ஜினியரிங்கில் எந்த துறையை தேர்வு செய்வது, எந்த இன்ஜினியரிங் படிப்புக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்ற சந்தேகம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உள்ளது. என்ன தான் ஆன்லைன் வாயிலாக, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டாலும், முழு திருப்தி ஏற்படுவதில்லை.
மாணவர் மற்றும் பெற்றோரின் இக்குழப்பத்தை தீர்க்கவே, 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025' வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நாளை (29ம் தேதி) நடக்கிறது.
'தினமலர்' நாளிதழுடன், கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலைவாய்ப்பு, இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம், என்ன பாடப்பிரிவுக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது, வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியாக சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறைகள், புரொவிஷனல் அலாட்மென்ட் பெறுவது மற்றும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, சென்னை அண்ணா பல்கலை (மாணவர் சேர்க்கை) முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசுகிறார்.
'வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா விரிவான ஆலோசனை வழங்க உள்ளார். மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கு பெறலாம்.