/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
/
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
ADDED : மே 30, 2025 11:47 PM
உடுமலை ; பூளவாடி கிளை நுாலகத்தில், பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடந்தது.
பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், கற்றுக்கொள்ளவும் விரும்புகின்றனர். பெற்றோர்களும் குழந்தைகள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பூளவாடி கிளை நுாலகம் மற்றும் நுாலக வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இலவச ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடந்தது. நுாலக வாசகர் வட்டத்தலைவர் சுப்ரமணி வரவேற்றார்.
பள்ளி மாணவர்கள் தயக்கமில்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கு, இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், மாணவர்கள் குழுவாக இணைந்து விளையாடும் ஆங்கில பேச்சு பயிற்சி போட்டிகளும் நடத்தப்பட்டன.
சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கோவை தன்னம்பிக்கை பயிற்சியாளர் ரவிகாந்தன், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பூளவாடி நுாலக வாசகர் பிரபாகரன், மாணவர்களுக்கு பேனா மற்றும் கையேடுகளை வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பு தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் நடத்தப்படுவதாகவும் நுாலகர் லட்சுமணசாமி தெரிவித்தார்.