/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அறிவியல் பாடங்களில் மேம்பட்ட ஆர்வம்'
/
'அறிவியல் பாடங்களில் மேம்பட்ட ஆர்வம்'
ADDED : ஜன 04, 2024 12:40 AM
திருப்பூர் : 'அறிவியல் பாடத்தில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தங்களின் ஆற்றலில் மேம்பட்டவர்களாக உள்ளனர்' என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பணியாற்றும் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட அளவில், எல்.ஆர்.ஜி., மகளிர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இப்பயிற்சி நடந்து வருகிறது. ஐந்து நாள் பயிற்சியில், நேற்று, தாவரவியல் துறை சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.
நேற்று, அத்துறை சார்ந்து பேராசிரியர் காந்திமதி, சுதா, சுமதி, மூர்த்திகுமார், விலங்கியல் துறை சார்ந்து பேராசிரியர் ஷீபா ஆகியோர் பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பேராசிரியர்கள் கூறுகையில்,'ஏற்கனவே, அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் படித்திருக்கிற அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி போதிப்பது எப்படி, என்பது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பாடம் வாரியாக, நிறைய கேள்விகளை எழுப்புகின்றனர்.
தங்களை 'அப்டேட்' ஆக்கிக்கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்,' என்றனர்.