/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலக்கிய 'நீரோடை'யில் சங்கமித்த ஆர்வலர்கள்
/
இலக்கிய 'நீரோடை'யில் சங்கமித்த ஆர்வலர்கள்
ADDED : பிப் 18, 2024 01:59 AM

அவிநாசி;அவிநாசியில் நீரோடை இலக்கிய விழா நிகழ்ச்சியில் இலக்கிய விருதுகள் அறிமுகம், கதை கேளு நிகழ்ச்சி அறிமுகம், கதை சொல்லி போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசளிப்பு விழா ஆகியன செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமட ஆதீனம் சுந்தரராஜ் அடிகளார் விழாவை துவக்கி வைத்தார். 'நீரோடை.காம்' நடத்திய கதை சொல்லி போட்டியில், முதல் பரிசை எழுத்தாளர் நெய்வேலி பாரதிகுமார் பெற்றார். அவருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
அபி, தினகரன், ஆயிஷா, சுசிலா உள்ளிட்டோர் சிறந்த கதை சொல்லிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விழாவில், எழுத்தாளர்கள் அரவிந்தன், கோமகன், சுப்ரபாரதிமணியன், 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் பூர்ணிமா, அரசு கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சூலுார் ஆனந்தி எழுதிய 'தேன் அகராதி' என்ற நுாலையும், கவிஞர் பூபாலன் எழுதிய 'சுந்தரபவனம்' என்ற நுாலையும் அறிமுகம் செய்து பேசினார்.
பல்வேறு பள்ளிகளில் இருந்து பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ், புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
தன்னார்வ அமைப்பினர், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நீரோடை இலக்கிய அமைப்பின் நிறுவனர் நீரோடை மகேஷ் நன்றி கூறினார்.