/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொழில்முனைவோர் - தொழிலாளர் ஒற்றுமை செயல்பாடு அவசியம்'
/
'தொழில்முனைவோர் - தொழிலாளர் ஒற்றுமை செயல்பாடு அவசியம்'
'தொழில்முனைவோர் - தொழிலாளர் ஒற்றுமை செயல்பாடு அவசியம்'
'தொழில்முனைவோர் - தொழிலாளர் ஒற்றுமை செயல்பாடு அவசியம்'
ADDED : அக் 25, 2024 10:47 PM
திருப்பூர்,: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பு (டி.எஸ்.எப்.,) சார்பில், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
டி.எஸ்.எப்., அமைப்பினர் கூறுகையில், ''தொழில் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும், தொழில்முனைவோரும், தொழிற் சங்க பிரதிநிதிகளும் ஒற்றுமையாக பேசி, தீர்வு காணவேண்டும். வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, திருப்பூருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏற்றுமதி வளர்ச்சிக்கும், தொழிலாளர் நல்வாழ்வுக்கும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு அவசியம்'' என்றனர்.
ஏற்றுமதியாளர்கள் பேசியதாவது:
ஐரோப்பா, அமெரிக்க வர்த்தகர்கள் திருப்பூருக்கு அதிக ஆர்டர்களை அளிக்க விரும்புகின்றனர். ஆனால், அங்கிருக்கும் அடையாளம் தெரியாத மற்றும் அங்கீகாரம் இல்லாத பல்வேறு அமைப்புகள், திருப்பூரின் வர்த்தகத்தை சிதைக்கும் நோக்கில் செயல்படுவது தெரிய வருகிறது. அனைவரும் ஓரணியில் நின்று தொழிலை காப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற சந்திப்புகளை நடத்தி, தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனம் என இருதரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கும், தொழிற் சங்கங்களும், தொழில்முனைவோரும் ஒற்றுமையாக பாடுபடவேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.