/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் கருத்தரங்கம் மாணவர்கள் துாய்மைப்பணி
/
சுற்றுச்சூழல் கருத்தரங்கம் மாணவர்கள் துாய்மைப்பணி
ADDED : அக் 10, 2024 11:55 PM

உடுமலை : உடுமலை அருகே, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப் படை சார்பில் வனவிலங்கு வார விழா மற்றும் சுற்றுசூழல் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். 'வன விலங்கு பாதுகாப்பு மற்றும் மனித இடையூறுகளும்' என்ற தலைப்பில் ஆசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.
'ஓசோன் படல ஓட்டைகளும் மனித தவறுகளும்' என்ற தலைப்பில் ஆசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி பேசினார். நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.
மாணவர்கள் வனவிலங்குகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்தனர். கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.