ADDED : ஜன 27, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சுற்றுச்சூழல் மற்றும் வனம், காலநிலை மாற்றத்துறை, தேசிய பசுமைப்படை சார்பில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார வாகனம் வந்தது. தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராதிகா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாஅமலோற்பமேரி துவக்கி வைத்தார்.
ஒன்பது கலைஞர்கள் இணைந்து பாரம்பரிய நாட்டியமாடி காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், மண் மற்றும் இயற்கை வளம் காத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்; விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டு, நெகிழி பைகள் மாணவியருக்கு வழங்கப்பட்டது.