/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓட்டம்ஆர்வம் காட்டிய பெற்றோர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓட்டம்ஆர்வம் காட்டிய பெற்றோர்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓட்டம்ஆர்வம் காட்டிய பெற்றோர்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓட்டம்ஆர்வம் காட்டிய பெற்றோர்
ADDED : செப் 20, 2025 11:36 PM

திருப்பூர்: அவிநாசி அருகே பெருமாநல்லுார், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி நிர்வாகமும், மாணவர்களும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பெற்றோருக்கான மராத்தான் போட்டியை நடத்தினர்.
பள்ளி தலைவர் சண்முகம், கொடியசைத்து துவக்கி வைத்தார். 6 கி.மீ., துார போட்டியில், 50க்கும் மேற்பட்ட பெற்றோர், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் மனோகரன், வாழ்த்தி பேசினார். பள்ளியில் துவங்கிய மராத்தான், பெருமாநல்லுார் பிரதான சாலை வழியாக, திருப்பூர் சாலை சென்றடைந்து, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியமானது என்பதை போன்று போட்டியில் பங்கேற்பதும் முக்கியம். பெற்றோர், உடல் நலன் சார்ந்த விஷயங்களை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கி பேசுகையில்,''சுற்றுச்சூழல் பாதுகாப்பில், ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். வரும் நாட்களில் பெற்றோருக்கென பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்,'' என்றார்.
பள்ளி முதல்வர் தனலட்சுமி, தலைமையாசிரியை பிரேமலதா மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.