ADDED : பிப் 20, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் கடமலைக்குண்டு 'ல' தொண்டு நிறுவனமும் இணைந்து அவிநாசி ஒன்றியம், கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
தலைமையாசிரியர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பிரபாவதி முன்னிலை வகித்தார். இதில், கலை நிகழ்ச்சி வாயிலாக, திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்த்தல், மண் வளம், இயற்கை வளம் காத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

