/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை எரிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
குப்பை எரிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : நவ 13, 2025 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை தாராபுரம் ரோட்டில், பழைய குப்பைக்கிடங்கு பகுதியில், குப்பை எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசுபடுகிறது.
உடுமலை தாராபுரம் ரோட்டில், உள்ள பழைய குப்பை கிடங்கில், பெரியகோட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி புகை மண்டலமாக மாறி, வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர்.சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. அதே போல், தாராபுரம் ரோட்டிலிருந்து திருப்பூர் ரோடு செல்லும் இணைப்பு ரோட்டிலும், குப்பை எரிக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

