/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும்
/
சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும்
சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும்
சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கணும்
ADDED : ஜூலை 23, 2025 09:05 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி, அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்க்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு மன்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய மன்றங்களில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமைப்படைகளும் உள்ளன.
இந்த மன்றங்களின் வாயிலாக, பள்ளிகளில் காய்கறி, மூலிகை தோட்டங்கள் அமைக்கப்பட்டன. உடுமலை சுற்றுப்பகுதி அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், இடவசதி உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் தோட்டம் அமைக்கப்பட்டது.
அரசின் சார்பில் அதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது. ஆனால் தோட்டங்களை பராமரிப்பதற்கும், இத்திட்டத்தை மேம்படுத்தவும் கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இதனால் சுற்றுப்பகுதி பள்ளிகளில் இத்தகைய திட்டம் பொழிவிழந்துள்ளது. அரசு பள்ளிகளில் பசுமையை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தோட்டங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.