/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாரத்தான்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாரத்தான்
ADDED : டிச 08, 2025 05:24 AM

அவிநாசி: திருமுருகன் பூண்டியில் உள்ள சுகன் சுகா மெடிக்கல் சென்டர்; சாய்கிருபா மெடி டிரஸ்ட் ஆகியன சார்பில் 'வந்தே மாதரம்' பாடல் எழுதி 150 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 'சுற்றுச் சூழலை பாதுகாக்க ஓடுங்கள்; போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க ஓடுங்கள்' என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடந்தது.ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் 14 வயதுக்கு மேற்பட்டோர்; 12 - 14 வயதினர்; 8 - 11 வயதினர்; 5 - 8 வயதினர் பங்கேற்ற ஒரு கி.மீ. என நான்கு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடந்தது.
சுகன் சுகா மெடிக்கல் சென்டரிலிருந்து துவங்கி பெரியாயிபாளையம், பச்சாம்பாளையம், நரிக்குறவர் காலனி வரை போட்டி நடந்தது.
திருப்பூர் 'சைமா' கவுரவத் தலைவர் ஈஸ்வரன், ரோட்டரி சங்க உதவி கவர்னர் இளங்கோவன், பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், கோவை பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் பால குமார், மாநிலச் செயலாளர் மலர்கொடி, கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரன், டாக்டர் கார்த்திகை சுந்தரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர் களுக்கு நடிகர் ரஞ்சித் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

