/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எபிக் ஸ்விப்ட் சி.என்.ஜி., கார் ஸ்ரீசஷ்டி கார்ஸ்-ல் அறிமுகம்
/
எபிக் ஸ்விப்ட் சி.என்.ஜி., கார் ஸ்ரீசஷ்டி கார்ஸ்-ல் அறிமுகம்
எபிக் ஸ்விப்ட் சி.என்.ஜி., கார் ஸ்ரீசஷ்டி கார்ஸ்-ல் அறிமுகம்
எபிக் ஸ்விப்ட் சி.என்.ஜி., கார் ஸ்ரீசஷ்டி கார்ஸ்-ல் அறிமுகம்
ADDED : அக் 05, 2024 04:04 AM

திருப்பூர் திருப்பூரில் மாருதி அரினா பிளாட்டினம் டீலரான ஸ்ரீ சஷ்டி கார்ஸ்-ல், புதிய எபிக் ஸ்விப்ட் சி.என்.ஜி., கார் அறிமுக விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ சஷ்டி கார்ஸ் நிர்வாக இயக்குனர் சுதன் தலைமை வகித்தார். நிதி இயக்குனர் தரணி பிரியா, அதானி குரூப்ஸ் மேலாளர் ராஜீவ் பிரதான் பங்கேற்றனர்.
புதிய கார் குறித்து ஸ்ரீ சஷ்டி கார்ஸ் பொதுமேலாளர் ரஞ்சித்குமார் கூறியதாவது:
மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் காரை, 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வெற்றியை தொடர்ந்து, நான்காம் தலைமுறை எபிக் ஸ்விட் சி.என்.ஜி., கார், முதல்முறையாக இசட் சீரியஸ் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிகபட்சமாக 32.85 கி.மீ., மைலேஜ் பெறலாம்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து வேரியன்டுகளிலும், 6 ஏர் பேக், ஹில்ஹோல்ட் அசிஸ்ட், சீட்பெல்ட், ரிமைண்டர் போன்ற எண்ணற்ற வசதிகள் உள்ளன. ரியர் ஏ.சி., சுசூகி கனெக்ட் 7 இன்ச் தொடுதிரை அம்சங்களும் உள்ளன.
ஸ்விப்ட் சி.என்.ஜி., ஆரம்ப விலை, 8.19 லட்சம் ரூபாய் முதல் 9.19 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் மூன்று வேரியண்ட்களிலும், ஆறு வண்ணங்களிலும் கிடைக்கும்.