/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்குமாடி குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா
/
அடுக்குமாடி குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 18, 2026 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் குடியிருப்புவாசிகள் அனைவரும் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
விழாவின் தொடர்ச்சியாக, சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு போட்டிகள், பெண்களுக்கு தண்ணீர் குடம் துாக்குதல், ஓவியம் வரைதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

