ADDED : டிச 16, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூரில் இயங்கி வரும் 'இனி ஒரு விதி செய்வோம்' அறக்கட்டளை சார்பில், மாநகர போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நகரப் பகுதியில் வாகனப் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக பயன்படுத்தப்படும், சிகப்பு நிற கோன்கள்; பேட்டன் விளக்குகள் மற்றும் ரிப்ளக்டிங் ஜாக்கெட் ஆகியன இந்த அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இவற்றை, அறக்கட்டளை நிர்வாகிகள் கவிதா, ஜனார்த்தனன் ஆகியோர் வழங்கினர்.மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, துணை கமிஷனர் சுஜாதா ஆகியோர் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.