/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் ஊத்துக்குளியில் நிற்க எதிர்பார்ப்பு
/
எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் ஊத்துக்குளியில் நிற்க எதிர்பார்ப்பு
எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் ஊத்துக்குளியில் நிற்க எதிர்பார்ப்பு
எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் ஊத்துக்குளியில் நிற்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 09, 2025 12:06 AM

ஊத்துக்குளி:புதுச்சேரி, காரைக்காலில் இருந்து திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக, கேரளாவின் எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ஊத்துக்குளியில் நிறுத்தப்படுகிறது. அதே நேரம், எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு ரயில் செல்லும் போது ஊத்துக்குளியில் நிறுத்தப்படுவதில்லை.
தினமும் இரவு, 10:20 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் 'டீ கார்டன்' எக்ஸ்பிரஸ் (எண்:16188) மறுநாள் அதிகாலை, 3:15 மணிக்கு கோவை வருகிறது. 4:00 மணிக்கு திருப்பூரை கடந்து, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகை, நாகூர் வழியாக சென்று, மறுநாள் காலை, 11:45 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை, 4:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை, 11:45 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேருகிறது.காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் போது ஈரோடு - திருப்பூர் இடையே உள்ள ஊத்துக்குளி ஸ்டேஷனில், இரவு, 11:45க்கு ரயில் நிறுத்தப்படுகிறது. ஆனால், எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் போது ஊத்துக்குளி ஸ்டேஷனில் ரயில் நிறுத்துவதில்லை; திருப்பூரில் புறப்படும் ரயில் ஈரோட்டில் தான் நிற்கிறது.
ஊத்துக்குளி பொதுமக்கள் கூறியதாவது:கேரளாவுக்கு ரயிலில் வெண்ணெய், நெய், மோர் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், கேரள மார்க்கமாக செல்லும் போது ரயிலை நிறுத்தி பின் இயக்குகின்றனர். காரைக்கால் செல்லும் போது நிறுத்துவதில்லை. தமிழகத்துக்குள் ரயில் பயணிக்கும் போது மட்டும் ஊத்துக்குளி ஸ்டேஷனில் நிறுத்துவது தவிர்க்கப்படுகிறது. கோவை வழியாக திருப்பூர், ஈரோடு வழியாக திருவாரூர், நாகை, நாகூர், காரைக்கால் செல்ல கூடிய ஒரே ரயில் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் மட்டுமே. இந்த ரயிலும் ஊத்துக்குளியில் நிற்காமல் செல்கிறது. தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் ஊத்துக்குளி மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

