/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எர்ணாகுளம் - யலஹன்கா வாராந்திர ரயில் ரத்து
/
எர்ணாகுளம் - யலஹன்கா வாராந்திர ரயில் ரத்து
ADDED : செப் 29, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: எர்ணாகுளம் - யலஹன்கா வாராந்திர ரயில் இயக்கம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, கர்நாடகா மாநிலம், யலஹன்காவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06101) இயக்கப்பட்டு வந்தது. புதன், வெள்ளி, ஞாயிறு இயக்கப்படும் இந்த ரயில் இயக்கம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், இன்று மதியம், 12:40 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட வேண்டிய ரயில் இயங்காது. நேற்று (28ம் தேதி), நாளை (30 ம் தேதி) யலஹன்காவில் இருந்து எர்ணாகுளம் வர வேண்டிய ரயில் இயக்கம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.