/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்
/
ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்
ADDED : ஜூன் 12, 2025 11:22 PM

திருப்பூர்; ''திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது எஸ்கலேட்டரை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில், எஸ்கலேட்டர் நிறுவும் பணி, 2024 ஜூன் மாதம் துவங்கியது. புஷ்பா தியேட்டர் ரவுண்டானா ஸ்டாப், அவிநாசி ரோடு, பி.என்., ரோடு வழியாக வருபவர்கள் நுழைவு வாயில் வழியாக செல்லாமல், நேரடியாக உயர்மட்ட பாலம், முதல் பிளாட்பார்ம் செல்ல ஏதுவாக எஸ்கலேட்டர் நிறுவும் பணி நடந்தது.
உபகரணங்கள் பொருத்தும் பணி ஜனவரியில் முழுமையாக முடிந்த நிலையில், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. கடந்த, மார்ச் மாதம் ஆய்வு நடத்திய சேலம் ரயில்வே கோட்ட பொறியாளர் குழுவினர், ''தரைத்தளத்தை உயர்த்திக் கட்டாவிட்டால், எஸ்கலேட்டர் வேகமாக இயக்குவதில் சிரமம் ஏற்படும்; பணிகளை விரைந்து முடித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என அறிவுரை வழங்கினர்.
ஆனால், மூன்று மாதமாகியும், எஸ்கலேட்டர் அப்படியே உள்ளது. யாரும் இதில் ஏறி செல்லாமல் இருக்க தற்காலிகமாக தடுப்பு வைத்து மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இரவில் விரும்பத்தகாத செயல்கள் நடக்கிறது. திறந்த வெளியாக இருப்பதால், அசுத்தமாகியும் வருகிறது. விரைவில் எஸ்கலேட்டர் திறக்கப்பட வேண்டும்.