/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிய - பசிபிக் மாநாட்டில் திருப்பூர் மாணவியின் கட்டுரை
/
ஆசிய - பசிபிக் மாநாட்டில் திருப்பூர் மாணவியின் கட்டுரை
ஆசிய - பசிபிக் மாநாட்டில் திருப்பூர் மாணவியின் கட்டுரை
ஆசிய - பசிபிக் மாநாட்டில் திருப்பூர் மாணவியின் கட்டுரை
ADDED : நவ 10, 2024 04:05 AM

ஆசிய - பசிபிக் ஆராய்ச்சி மாநாட்டில், ஆராய்ச்சிக்கட்டுரை சமர்பிக்கும் வாய்ப்பை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பெற்றிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் சதுர்யா. காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.எச்டி., பயின்று வருகிறார். இவர், ஆசிய - பசிபிக் ஆராய்ச்சி மாநாட்டில், ஆராய்ச்சிக் கட்டுரை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாடு, கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடந்தது.
பேஷன் கூட்டுறவு சார்ந்த துறையில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் 'பிளாக் செயின்' தொழில்நுட்பம் குறித்து, தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இளம் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கட்டுரைகளில், இவரது கட்டுரை முதல், 10 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கிறது. இதை பெல்ஜியம் ப்ரசெல்ஸ் நகரில் உள்ள சர்வதேச கூட்டுறவு கூட்டமைப்பு, யங் மற்றும் எமர்ஜிங் ஸ்காலர் திட்டத்தின் கீழ், யங் ஸ்காலர் இனிஷியேட்டிவ் வாயிலாக, சதுர்யாவின் கட்டுரையை தேர்வு செய்துள்ளது.