/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இளம்பெண்கள் முன்னேற அவசியமான பங்களிப்புகள்'
/
'இளம்பெண்கள் முன்னேற அவசியமான பங்களிப்புகள்'
ADDED : அக் 18, 2024 06:36 AM

திருப்பூர் : திருப்பூர் 'நிப்ட்- டீ' கல்லுாரியில், பெண்கள் அதிகாரமளிக்கும் பிரிவின் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெண்கள் அதிகாரமளித்தல் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வரவேற்றார். புனித ஜோசப் மகளிர் கல்லுாரி முதல்வர் டாக்டர் சகாய தமிழ்ச்செல்வி பேசுகையில், ''பெண்கள், தங்கள் லட்சியங்களை அடைவதற்கான பாதையில் செல்கின்றனர். இளம்பெண்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதில் சமூகம், குடும்பம், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் பங்களிப்பு முக்கியம். மாணவியர் நிலையில் உள்ளவர்களை விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல் மற்றும் தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வகையில் தயார்படுத்த வேண்டும்,'' என்றார்.
எழுத்தாளர் சுதா மூர்த்தி சிறப்புரை ஆற்றினார். மகளிர் அதிகாரமளித்தல் பிரிவின் உறுப்பினர் டாக்டர் திலகவதி, நன்றி கூறினார். அனைத்து துறை பேராசிரியர்களும் பங்கேற்றனர்.