/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் விபத்து மையத்தடுப்பு அமையுங்க
/
பிரதான ரோட்டில் விபத்து மையத்தடுப்பு அமையுங்க
ADDED : ஜன 17, 2025 11:53 PM
உடுமலை,; உடுமலை, பழநி ரோட்டில் கொழுமம் ரோடு பிரிவு முதல், நகர எல்லை வரை மையத்தடுப்புகள் அமைக்க வேண்டும்.
உடுமலை, பழநி ரோட்டில், கொழுமம் ரோடு பிரிவு முதல், வெஞ்சமடை வாய்க்கால் பாலம் வரை, ஏராளமான பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளதோடு, இரு புறமும் அதிகளவு குடியிருப்புகளும் உள்ளன.
இந்த ரோட்டில் அதிவேகமாக வாகனங்கள் வரும் நிலையில், ரோட்டை கடக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், குடியிருப்புகளிலிருந்து, பிரதான ரோட்டிற்கு வரும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
எனவே, இந்த ரோட்டில், கொழுமம் ரோடு பிரிவு முதல், நகர எல்லை வரை, மையத்தடுப்புகள் அமைக்கவும், பள்ளி, கல்லுாரிகள் முன், வேகத்தடை அமைக்கவும் வேண்டும்.