/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விலை கொடுத்து வாங்கும் போதை பொருளும் விஷம் தான்!'
/
'விலை கொடுத்து வாங்கும் போதை பொருளும் விஷம் தான்!'
'விலை கொடுத்து வாங்கும் போதை பொருளும் விஷம் தான்!'
'விலை கொடுத்து வாங்கும் போதை பொருளும் விஷம் தான்!'
ADDED : ஜூலை 20, 2025 01:23 AM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், போதை பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாவட்ட உதவி கமிஷனர் (கலால்) செல்வி, முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.
போதை தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:போதை பழக்கம், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொடிய அரக்கன். போதைப் பொருட்கள், நாம் விலை கொடுத்து வாங்கும் விஷம் என்ற உணர்வு வர வேண்டும்.
கஞ்சா, குட்கா, அபின், கூலிப் மற்றும் கொகைன் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் போதை பொருட்கள், உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கச் செய்து, வாழ்க்கையை சீரழிக்கும். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பின், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்தும், அதனை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மாணவ, மாணவியர் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக விளக்கினர். கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.