/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுபிறப்பும் தீயவை தீண்டா... உத்ராயண புண்ணிய காலம் கோவில்களில் பக்தர் வழிபாடு

ADDED : ஜன 14, 2025 11:46 PM

திருப்பூர்; தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாதங்கள் உத்தராயணம்; ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் தட்சிணாயணம். தை மாதம் முதல் நாளான நேற்று, திருப்பூர் பகுதியில் உள்ள கோவில்களில், அதிகாலையில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
அதிகாலை, வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள், குடும்ப சகிதமாக கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், எஸ்.ஆர்., நகர் ரத்தினவிநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ கொண்டு காப்பு கட்டப்பட்டிருந்தது நேற்று, கரும்பு, முறுக்கு உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபாடு நடந்தது.