sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குமரன் மடிந்தாலும் வேர்கள் மடியவில்லை; தியாக பூமியில் நடந்த மாபெரும் பேரணி

/

குமரன் மடிந்தாலும் வேர்கள் மடியவில்லை; தியாக பூமியில் நடந்த மாபெரும் பேரணி

குமரன் மடிந்தாலும் வேர்கள் மடியவில்லை; தியாக பூமியில் நடந்த மாபெரும் பேரணி

குமரன் மடிந்தாலும் வேர்கள் மடியவில்லை; தியாக பூமியில் நடந்த மாபெரும் பேரணி


ADDED : ஆக 16, 2025 10:55 PM

Google News

ADDED : ஆக 16, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் கவிஞர் சிவதாசன், நம்மிடம் பகிர்ந்தவை:

தேசபந்து வாலிபர் சங்கத்தில், திருப்பூர் குமரனும் அங்கம் வகித்தார். அதனால் தான், காந்தியடிகள் கைதான போது, அதை கண்டித்து நடந்த ஊர்வலத்தில் அவரால் பங்கேற்க முடிந்தது. திருப்பூரில் தேசப்பந்து வாலிபர் சங்கம் போன்று, நேருஜி வாலிபர் சங்கமும் இயங்கி வந்தது.

குமரன் பங்கேற்ற சட்ட மறுப்பு இயக்க ஊர்வலத்தில் பங்கேற்க முடியாமல் போனதன் விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் விளைவாக முளைத்தது தான், 'குமரன் வாலிபர் சங்கம்'. இதற்கு காரணமானவர், திருப்பூர் தேவாங்கபுரத்தில் வசித்த காதர்பாட்ஷா என்பவரின் மகன் ரஷீத்பாய். தேர்தலின் போது, காங்., கட்சியின் மிகச்சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதால், காமராஜரால், இவர், 'எலக்ஷன் டைகர்' என அழைக்கப்படுவார்.

அறையில் அடைத்த தாய் திருப்பூரில் குமரன் பங்கேற்ற ஊர்வலத்தில் தானும் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில் இருந்துள்ளார் ரஷீத்பாய். ஆனால், அந்த ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு எது வேண்டுமாயினும் நடக்கும் என்ற செய்தி கசிய, ரஷீத்பாயை அவரது குடும்பத்தினர் காரமடை பெள்ளாத்தியில் இருந்த தங்களது தோட்டத்தில் விளைந்திருந்த தானிய மூட்டைகளை எடுத்து வர, முந்தைய நாளே அனுப்பி வைத்தனர். அங்கு அவரை ஒரு அறையில் வைத்து பூட்டியிருக்கிறார், அவரது தாய்.

ஊர்வலமும் முடிந்தது; குமரன் அடிபட்டு, மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற தகவலை அறிந்த ரஷீத்பாய், மருத்துவமனைக்கு சென்று குமரன் உடலை பார்த்து கதறியிருக்கிறார். குமரன் இறந்த, 1932ம் ஆண்டில் இருந்து ஓராண்டு காலத்துக்கு, நகரில், எங்கும் காங்கிரஸ் கொடி பறக்கவோ, காங்., அமைப்புகள் இயங்கவும் கெடுபிடி காண்பித்தது, பிரிட்டிஷ் போலீஸ்; ஓராண்டுக்கு பின், கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

மாபெரும் பேரணி பின், திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையத்தில், குமரன் வாலிபர் சங்கம் துவங்கப்பட்டது. ரஷீத்பாய் செயலாளராக, காங்கிரஸ் கவுண்டர் என்பவர் தலைவராக, கீரணி நடராஜ் செட்டியார் என்பவர் பொருளாளராக நியமிக்கப்பட்டனர். அங்கிருந்த பஜனை மடம் தான், சங்கத்தின் தலைமையகம்.

குமரன் இறந்த மூன்றாமாண்டில், காங்., கட்சி துவங்கிய, 50ம் ஆண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அந்நாளில் குமரன் வாலிபர் சங்கம் சார்பில், ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கும் அளவு மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் போலீசார் எவ்வளவு தடுத்தும் முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us