/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'றெக்கை' கட்டி பறக்கும் டூவீலர்கள் 10வது இடத்தில் இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை!
/
'றெக்கை' கட்டி பறக்கும் டூவீலர்கள் 10வது இடத்தில் இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை!
'றெக்கை' கட்டி பறக்கும் டூவீலர்கள் 10வது இடத்தில் இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை!
'றெக்கை' கட்டி பறக்கும் டூவீலர்கள் 10வது இடத்தில் இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை!
ADDED : நவ 23, 2024 11:07 PM
''டேய் மச்சான், திருப்பூர்ல வண்டி ஓட்டிப்பழகிட்ட இந்தியாவில வேறறெங்க வேணும்னாலும், ஓட்டிடலாம்,''. இந்த டயலாக், சர்வசாதாரணமாக திருப்பூரில் கேட்க முடியும். அது, அகலமான சாலை என்றாலும், முட்டுச்சந்தாக இருந்தாலும் சரி, மின்னல் வேகத்தில், 'சைக்கிள் கேப்'பில், இடையில் புகுந்து 'பறக்கும்' சாகச டூவீலர்கள் ஓட்டிகள் திருப்பூரில் சற்று அதிகம் தான்.
எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், 'டாலர் சிட்டியின்' முக்கிய சாலைகளில், 24 மணி நேரமும் டூவீலர்களை சாதாரணமாக பார்க்க முடியும். ஆண்டுக்கு ஆண்டு பதிவு செய்யப்படும் டூவீலர்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சியாக உள்ளது.
திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கடந்த, 2023 ஜன., முதல் அக்., 31ம் தேதி வரை, 2,023 டூவீலர் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், நடப்பாண்டு, ஜன., முதல் அக்., 31ம் தேதி வரை, 2,064 டூவீலர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்கள், 466 ஆக அதிகரித்து, ஆட்டோக்கள் பதிவு, ஏழாக குறைந்துள்ளது. சரக்கு வாகன பதிவும் (100 ஆக) குறைந்து விட்டது. அதே நேரம், மொத்த வாகன பதிவு கடந்த ஆண்டை விட, 2,712ல் இருந்து, 2,808 ஆக உயர்ந்துள்ளது.
பல்லடம், காங்கயம் என விரிவான எல்லைகளை கொண்டுள்ள, திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த, 2023ல், 11 ஆயிரத்து, 634 டூவீலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு கடந்த பத்து மாதத்தில் (ஜன., - அக்., வரை) 12 ஆயிரத்து, 339 டூவீலர் பதிவு நடந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மொத்த வாகன பதிவு பத்து மாதங்களில், கடந்தாண்டு, 16 ஆயிரத்து, 90 ஆக இருந்துள்ளது. நடப்பாண்டு, 16 ஆயிரத்து, 272 ஆக உயர்ந்துள்ளது. உடுமலை, தாராபுரம் புறநகராக இருப்பதாலும், திருப்பூரை ஒப்பிடும் போது, மக்கள் தொகை, நிறுவனங்கள் எண்ணிக்கை குறைவு என்பதாலும், வாகனப்பதிவு குறைவாக உள்ளது.
10வது இடத்தில் திருப்பூர்
ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கூறியாவது:
சென்னைக்கு அடுத்து திருச்சி, மதுரை, கோவை நகரங்கள் அதிகளவில் டூவீலர்கள் பயணிக்கும் நகரங்களாக உள்ளது. இப்பட்டியலில் திருப்பூர் பத்தாவது இடத்தில் உள்ளது. திருப்பூருக்குள் காலை முதல் மாலை, இரவு வரை கூட டூவீலரில் வந்து விட்டு, திரும்ப செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை மட்டும், 20 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. வாகன எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால், பாதுகாப்பாக, போக்குவரத்து விதிகளை பின்பற்றி, வாகனங்களை இயக்குவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
போலீசார் உதவியுடன், முக்கிய சந்திப்புகளில் 'சிக்னல் ப்ரீ' திட்டம் வந்துள்ளது. வாகன ஓட்டிகளும் வரவேற்றுள்ளனர்; விபத்துகளும் வெகுவாக குறைத்துள்ளது. அதே நேரம், பீக்ஹவர்ஸில் சாலையில் பாதசாரிகள் நடக்க கூடாத வழியில்லாத வகையில் அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, பல்லடம் ரோடு பகுதியில், குறிப்பாக நகருக்குள் நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை, விசேஷ நாட்களில் வாகனங்களில் சாலை ஆக்கிரமிப்பு, இருமடங்காகி விடுகிறது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் ஒருபுறம் இருந்தாலும், வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு மொபைல் போன் போல், ஆளுக்கொரு டூவீலர் வைத்திருப்பதால், திருப்பூரில் வாகன எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.