தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கையெழுத்து

 எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கையெழுத்து

 எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கையெழுத்து


ADDED : ஏப் 03, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்: எவர்சில்வர் பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

திருப்பூர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த முறை போடப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிச. மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் மற்றும் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் பிரேமா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

முதல் கட்டமாக பித்தளை மற்றும் செம்பு உலோக உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் உற்பத்தியாளர்கள் தரப்பில் 18 சதவீதம் தருவதாக கூறினர். இதை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி காலை 11:30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 16 சதவீதம் சம்பள உயர்வு தருவதாக கூறினர். இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொண்டனர். இருதரப்பினரிடமும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us