/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கு பார்த்தாலும் குப்பை மலை... சுகாதார சீர்கேட்டால் மக்கள் கவலை
/
எங்கு பார்த்தாலும் குப்பை மலை... சுகாதார சீர்கேட்டால் மக்கள் கவலை
எங்கு பார்த்தாலும் குப்பை மலை... சுகாதார சீர்கேட்டால் மக்கள் கவலை
எங்கு பார்த்தாலும் குப்பை மலை... சுகாதார சீர்கேட்டால் மக்கள் கவலை
ADDED : அக் 16, 2024 12:30 AM

குப்பை அள்ளுவது எப்போது?
1. திருப்பூர் பூ மார்க்கெட் பின் தேங்கியுள்ள ஆயுதபூஜை கழிவுகளை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் இன்னமும் அகற்றவில்லை. அவ்வழியை கடந்து செல்ல முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது.
- மோகன்ராஜ், கருவம்பாளையம். (படம் உண்டு)
2. திருப்பூர், குமார் நகர் ஸ்டாப்பில் நுாலகம் அருகே தொட்டி நிறைந்து, குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- கனிகா, குமார்நகர். (படம் உண்டு)
3. திருப்பூர், சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர்., நகரில் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ள வருவதில்லை.
- ரேணு, எம்.ஜி.ஆர்., நகர். (படம் உண்டு)
4. திருப்பூர், திருவள்ளுவர் நகர், வடுகபாளையம் மயானம் செல்லும் சாலையில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை அள்ள வேண்டும்.
- போஸ், வடுகபாளையம். (படம் உண்டு)
5. திருப்பூர், பங்களா ஸ்டாப், சி.எஸ்.ஐ., சர்ச் பின்னுள்ள வீதியில் வழிநெடுகிலும் குப்பை தேங்கியுள்ளது. குப்பை அள்ள ஒரு வாரமாக மாநகராட்சி ஊழியர்கள் வரவில்லை.
- கார்த்தி, அவிநாசி ரோடு. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து அவ்வப்போது தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- தவசெல்வம், பங்களாஸ்டாப். (படம் உண்டு)
வீணாகும் சாலை
திருமுருகன்பூண்டி ரிங்ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகி, குழியே ஆகிவிட்டது. நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவே இல்லை.
- மனோகர், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)
சாலை சீரமைக்கலாமே!
திருப்பூர், பிரிட்ஜ்வே காலனி விரிவு முதல் வீதி சாலை சேதமாகி, மழைநீர் தேங்கி, குண்டும் குழியுமாக மாறி வருகிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- அருண்சங்கர், பிரிட்ஜ்வேகாலனி. (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், 57வது வார்டு, திருக்குமரன் நகர், 6வது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை.
- மதிவாணன், திருக்குமரன்நகர். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், பட்டத்தரசி அம்மன் கோவில் பின்னுள்ள வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- மூர்த்தி, எம்.எஸ்., நகர். (படம் உண்டு)
தெருவிளக்கு எரிவதில்லை
திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., லே - அவுட் மேற்கு வீதியில் கடந்த பத்து நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- கணேசன், ஏ.வி.பி.லே., அவுட். (படம் உண்டு)-
ஆக்கிரமிப்பு அகற்றுங்க...
திருப்பூர், அங்கேரிபாளையம், சாஸ்திரி நகர் - இரண்டாவது வீதியில், ஆக்கிரமிப்பு அதிகமாகி வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- திருநாவுக்கரசு, சாஸ்திரிநகர். (படம் உண்டு)