/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகழ் இயந்திரங்கள் வேலை நிறுத்தம்; ஒருபுறம் முடிவு: மறுபுறம் துவக்கம்
/
அகழ் இயந்திரங்கள் வேலை நிறுத்தம்; ஒருபுறம் முடிவு: மறுபுறம் துவக்கம்
அகழ் இயந்திரங்கள் வேலை நிறுத்தம்; ஒருபுறம் முடிவு: மறுபுறம் துவக்கம்
அகழ் இயந்திரங்கள் வேலை நிறுத்தம்; ஒருபுறம் முடிவு: மறுபுறம் துவக்கம்
ADDED : ஏப் 15, 2025 11:43 PM
திருப்பூர்; வாடகை உயர்வு முன்னிறுத்தி அகழ் இயந்திரங்கள் வேலை நிறுத்தம் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முடிவுக்கு வந்தன. சில பகுதிகளில் நேற்று முதல் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது.
அகழ் இயந்திர உரிமையாளர்கள், வாடகை உயர்வு வலியுறுத்தி ஐந்து நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவ்வகையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏறத்தாழ 1.5 லட்சம் இயந்திரங்கள் கடந்த, 10ம் தேதி முதல் ஐந்து நாள் என நேற்று முன் தினம் வரை இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான அகழ் இயந்திரங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
வாடகை உயர்வு
இந்த இயந்திரங்கள் ஒரு மணி நேரம் 3 ஆயிரம் ரூபாய்; அடுத்த ஒரு மணி நேரத்துக்கு, 1,100 ரூபாய் என்று உள்ளதை, விலைவாசி உயர்வு காரணமாக, 1,400 ரூபாயாக உயர்த்தவும், வாடகை உயர்வை அறிவிக்கும் விதமாகவும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது ஐந்து நாள் வேலை நிறுத்தத்துக்குப் பின் நேற்று முதல் இந்த புதிய உயர்த்தப்பட்ட வாடகை அடிப்படையில், அகழ் இயந்திரங்கள் இயங்கத் துவங்கின.
இந்நிலையில், தாராபுரம் பகுதியில் குண்டடம் ஒன்றியம், பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியத்திலும் அகழ் இயந்திரங்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தை நேற்று முதல் துவங்கியுள்ளன.