/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் 'மரைன் எக்ஸ்போ'மாலைப் பொழுதில் ஒரு உற்சாகம்
/
பல்லடத்தில் 'மரைன் எக்ஸ்போ'மாலைப் பொழுதில் ஒரு உற்சாகம்
பல்லடத்தில் 'மரைன் எக்ஸ்போ'மாலைப் பொழுதில் ஒரு உற்சாகம்
பல்லடத்தில் 'மரைன் எக்ஸ்போ'மாலைப் பொழுதில் ஒரு உற்சாகம்
ADDED : ஜூன் 01, 2025 06:41 AM

பல்லடம் : 'கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாலை நேரத்தில் உற்சாகத்துடன் பொழுதுபோக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்துள்ளோம்' என்கின்றனர், 'மரைன் எக்ஸ்போ' ஏற்பாட்டாளர்கள்.
அவர்கள் கூறியதாவது:
பல்லடம் கண்ணம்மாள் பள்ளி எதிரே, 'மரைன் எக்ஸ்போ' பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாலை, 5:00 முதல், இரவு, 9:30 மணி வரை செயல்படும். அரங்கில் நுழைந்ததும், பார்வைக்கு விருந்தாக, வண்ண, வண்ண கடல் மீன்களை ரசிக்கலாம்.
குகை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அலங்கார பேழைக்குள், துள்ளி விளையாடும் மீன்கள், நிச்சயம் குழந்தைகளை குஷிப்படுத்தும். வெளிநாடுகளில் நடத்தப்படும் எக்ஸ்போவில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் கடல் கன்னி, முதன் முறையாக இங்கும் பார்க்க முடியும்.
ஒரே கூரையின் கீழ், நம் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற பொருட்கள்,விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதுாகலமாக விளையாடி மகிழ, ஜெய்ன்ட் வீல், ராட்டினம், ரோலர் கோஸ்டர், வாட்டர் போட், 3டி பேய் வீடு போன்று பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.