/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் 'ரிசல்ட்'க்கு நிகரான பரபரப்பு
/
தேர்தல் 'ரிசல்ட்'க்கு நிகரான பரபரப்பு
ADDED : டிச 20, 2025 09:12 AM
வா க்காளர் பட்டியலில், எஸ்.ஐ.ஆர்., பணியின் போது கூட, அதுகுறித்த பெரிய எதிர்பார்ப்பு, வாக்காளர்களிடம் இல்லாமல் இருந்தது.
ஆனால், நேற்று மதியம் எஸ்.ஐ.ஆர்.,க்கு பின், வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏதோ, தேர்தல் ரிசல்ட் வெளியாவது போன்றதொரு பரபரப்பு அரசியல் கட்சியினரிடமும், வாக்காளர்களிடமும் தென்பட்டது.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வாக்காளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் சென்று, பலரும் தங்களின் பெயரை உறுதிப்படுத்திக் கொண்டனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பகுதி பி.எல்.ஓ., அரசியல் கட்சி நிர்வாகிகளை மொபைல் போன் வழியாக அழைத்தும், வாட்ஸ் ஆப்பில் தகவலாக பதிவு செய்தும், 'ஏன் எங்களது பெயர் விடுபட்டது?' என்ற கேள்வியை எழுப்பினர்.

