ADDED : செப் 26, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
அவிநாசி: அவிநாசி நண்பர்கள் இறகுப்பந்து கழகத்தின் செயற்குழுக் கூட்டம், பன் அன் ப்ரோலிக் ஹாலில் நடைபெற்றது.
நண்பர்கள் இறகுப்பந்து கழக புதிய தலைவராக பிரமோத், செயலாளராக சையது முகமது, பொருளாளராக ஸ்ரீகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், ஆண்டுக்கு மூன்று முறை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்துவது, இளம் வீரர்களை உருவாக்க சிறப்பு கவனம் செலுத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
