/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னுதாரணமாக விளங்கும் சோழர் கால ஆட்சி!
/
முன்னுதாரணமாக விளங்கும் சோழர் கால ஆட்சி!
ADDED : செப் 20, 2024 10:49 PM

வரலாறு படித்து என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால், முந்தைய, 10 நிமிடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி கூட வரலாறு தான். வரலாற்றில் இருந்து நம் வாழ்க்கை, தொழில், வெற்றிக்கு பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால ஆட்சியை உற்று கவனிப்பது அவசியம்.
அக்காலத்தில், கோவிலுக்கு நிலம் வழங்கியவர்களின் விவரம் கூட கல்வெட்டில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. பொறியியல், போக்குவரத்து என எதுவும் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான நுணுக்கம் மிகவும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் ஒவ்வொரு நிறுவனங்களின் பெருமையும், புகழும் அந்த நிறுவனங்கள் துவங்கப்பட்ட காலத்தை வைத்தும் கணக்கிடப்படும். ஒரு நிறுவனத்தின் புகழ் என்பது, அந்த மாவட்டம், மாநிலம், நாடு மற்றும் உலகளவில் புகழ் பெற்றிருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்; இது, புவியியல் சார்ந்த ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
சோழர் காலத்தில் அங்குள்ள கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகங்களே செய்து கொடுத்தன.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்கள் தயாரிப்பு பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதில் அதிகாரிகள் எப்படி கவனம் செலுத்துவார்களோ, சோழர் காலத்தில் பயனற்ற தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றி, மன்னரிடம் நற்பெயர் எடுக்க அமைச்சர்கள் முயற்சி எடுப்பார்கள் என்பது வரலாறு.
-- பிரதிப் சக்ரவர்த்தி
வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்