/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரசு கல்லுாரியில் அறிவுக்குவியல்' மாணவருக்கு உணர்த்த கண்காட்சி
/
'அரசு கல்லுாரியில் அறிவுக்குவியல்' மாணவருக்கு உணர்த்த கண்காட்சி
'அரசு கல்லுாரியில் அறிவுக்குவியல்' மாணவருக்கு உணர்த்த கண்காட்சி
'அரசு கல்லுாரியில் அறிவுக்குவியல்' மாணவருக்கு உணர்த்த கண்காட்சி
ADDED : ஜன 06, 2024 11:50 PM

''நாங்கெல்லாம் கவர்மென்ட் ஸ்கூல், காலேஜிலும் தான் படிச்சோம்; இப்ப நல்ல வேலையில, நல்ல சம்பாதியத்துல தானே இருக்கோம்...'' இப்படி நம் பெற்றோர் சொல்லக் கேட்டிருக்கலாம்.
'அந்த காலம் மட்டுமல்ல... இந்த காலத்திலும் இதே நிலை தான்; அரசு பள்ளி, கல்லுாரிகளில் படித்தாலும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
பொதுவாக, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், 95 சதவீதம் பேர், ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் பிள்ளைகளாக உள்ளனர். தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பொருளாதார சூழல் இருந்தாலும், அரசுப்பள்ளி, கல்லுாரிகளில் படிக்க வைக்கும் பெற்றோரும் குறிப்பிட்ட அளவில் உண்டு.
எனவே, அரசு பள்ளி, கல்லுாரிகளில் விசாலமான கட்டமைப்பு இருந்தும், ஆசிரியர் பற்றாக்குறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சில அடிப்படை வசதியின்மை இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், கல்வித்தரம் என்பது, நிலையானதாக தான் இருக்கிறது.
இதை அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் உணர்த்தி, அவர்கள் அரசு கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த, பள்ளிக்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசுப்பள்ளிகளில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, கல்லுாரிகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று, கல்லுாரிகளின் கட்டமைப்பு, பல்வேறு துறைகள், நுாலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை காண்பித்து, அவர்கள் மனதிலும் கல்லுாரி வாசலில் காலடி வைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுத்தப்பட்டது.
அவ்வரிசையில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரிக்கு, அரசுப்பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சிறிய மற்றும் பெரிய தாவர இனங்கள், பலவகை மூலிகை தாவரங்கள் என, வியக்க வைக்கும் வகையில் கல்லுாரி நிர்வாகத்தினரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தாவர, செடியினங்கள் உள்ளிட்ட பிற துறை சார்ந்த பயிற்றுவிப்பு முறையை அறிந்து சென்றனர்.