தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தமிழ் கற்றல் சீர்திருத்தம் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

 தமிழ் கற்றல் சீர்திருத்தம் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

 தமிழ் கற்றல் சீர்திருத்தம் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 14, 2026 09:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம், தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாமலை ராயப்பன், பொருளாளர் நல்லசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 2025--26ம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

தமிழ்ப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளில் தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் அடங்கிய குழுவை அமைத்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மாணவர்களிடையே தமிழறிவை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us